வடசென்னை ஒரு இடம் மட்டுமல்ல, அது ஒரு வரலாறு, அது ஒரு வாழ்க்கை முறை. ஒரு கலாச்சாரக் குறியீடு. வட சென்னையைப் பற்றிய மிகை புனைவுகள் அப்பகுதி மக்களை ஒரு நவீன இனக்குழு சமூகமாகவே கட்டமைக்கின்றன. ஆனால் அந்த பிம்பத்திற்கு மாறா வடசென்னையின் அசலான வாழ்வியலையும் அரசியலையும் மனித முகங்களையும் தேடிச் செல்கிறார் ஷாலின் மரிய லாரன்ஸ். பெண்ணியம், சாதி ஒழிப்பு ஆகிய தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் ஷாலின் மரிய லாரன்ஸ் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.