தமிழ் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் ஆய்வு மன்றத்தில் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. கருத்தரங்குக் கட்டுரைகள் ‘மண்வாசம்’ என்ற பெயரில் 2000 நவம்பர் மாதம் வெளிவந்தது. அவ்வகையில் ”வாழும் மரபுகள்'” இரண்டாவது நூல். இரண்டாவது சிறப்புக் கருத்தரங்கில் படிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு செப்பம் செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுதியே இந்நூல். இந்நூலில் கலை இலக்கியம் பற்றி நான்கு கட்டுரைகளும், விளையாட்டுகள் – பழக்க வழக்கங்கள் பற்றி மூன்றும், வாழ்க்கை வட்டச் சடங்குகள் பற்றி நான்கும். வழிபாடுகள் பற்றி மூன்றும், மரபுவழித் தொழில்-தொழில் நுட்பம் பற்றி ஐந்தும் ஆக, மொத்தம் பத்தொன்பது கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இதுவரை அணுகப்படாத புதிய களங்களில் கால் பதித்துள்ளனர். கட்டுரையாளர்கள். அவ்வாறு சேகரிக்கப்பட்ட அரிய பல செய்திகள் மிகவும் தரமானவை என்பதில் ஐயமில்லை. அத்துடன் இக்கட்டுரைகள் மரபுகளைப் பதிவு செய்வதோடு, அம்மரபுகள் எதிர்வரும் சந்ததியனரால் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்களைப் புரிந்து கொண்டு எவ்வாறு மேம்படுத்தலாம் என்றும் சிந்திக்கின்றன.
வாழும் மரபுகள்
Free

- Book Title : வாழும் மரபுகள்
- Author Name : ஆறு.இராமநாதன், சேவியர் அந்தோனி சே.ச., கே.ஏ.செல்வராசு
- Language : Tamil
- Pages : 186
- Publisher : தன்னனானே
- Book Edition : December, 2011
English Names: sanga kaalam tholporul aaivugal, sanga kala tholporul aaivukal