சவரிராய பிள்ளை வம்ச வரலாறு’ (1899) என்ற நூலும், ‘சவரிராய பிள்ளை வரலாறு’ (1900) என்ற நூலும் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் கால இடைவெளியில் மறு பதிப்பாக இப்பொழுது வருகின்றன. சவரிராயபிள்ளையின் பத்தாவது மகனான யோவான் தேவசகாயம் சவரிராயன் (1843-1904), தமது பாட்டனார் மதுரேந்திரம்பிள்ளை (1766-1821), தந்தையார் மரியசவரிராயன் (1801-1874) ஆகிய இருவரும் எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடிகள், தமது தாயாரிடம் கேட்டறிந்த செய்திகள், தமது முன்னோர்களுடன் தொடர்புடைய ஊர்களுக்குச் சென்று நிகழ்த்திய கள ஆய்வில் கிடைத்த செய்திகள் போன்றவற்றின் துணையுடன் இவ்விரு நூல்களையும் எழுதியுள்ளார். உபதேசியார் சவரிராய பிள்ளையின் பரம்பரையினரது பயன்பாட்டுக்காக இவை எழுதப்பட்டன. எனினும் தென் தமிழகக் கிறித்தவத்தின் வரலாற்றை அறிய உதவும் சமூக வரலாற்றாவணமாகவும் இவை விளங்குகின்றன. இந்நூலின் பதிப்பாசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் தமிழ்க் கிறித்தவம் தொடர்பான வரலாற்றாய்வில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருபவர்.
உபதேசியார் சவரிராய பிள்ளை (1807-1874)
Free
சவரிராயபிள்ளை வம்ச வரலாறு’ (1899) என்ற நூலும், ‘சவரிராயபிள்ளை வரலாறு’ (1900) என்ற நூலும் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் கால இடைவெளியில் மறு பதிப்பாக இப்பொழுது வருகின்றன. சவரிராயபிள்ளையின் பத்தாவது மகனான யோவான் தேவசகாயம் சவரிராயன் (1843-1904), தமது பாட்டனார் மதுரேந்திரம்பிள்ளை (1766-1821), தந்தையார் மரியசவரிராயன் (1801-1874) ஆகிய இருவரும் எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடிகள், தமது தாயாரிடம் கேட்டறிந்த செய்திகள், தமது முன்னோர்களுடன் தொடர்புடைய ஊர்களுக்குச் சென்று நிகழ்த்திய கள ஆய்வில் கிடைத்த செய்திகள் போன்றவற்றின் துணையுடன் இவ்விரு நூல்களையும் எழுதியுள்ளார். உபதேசியார் சவரிராய பிள்ளையின் பரம்பரையினரது பயன்பாட்டுக்காக இவை எழுதப்பட்டன. எனினும் தென் தமிழகக் கிறித்தவத்தின் வரலாற்றை அறிய உதவும் சமூக வரலாற்றாவணமாகவும் இவை விளங்குகின்றன. இந்நூலின் பதிப்பாசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் தமிழ்க் கிறித்தவம் தொடர்பான வரலாற்றாய்வில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருபவர்.
- Book Title : உபதேசியார் சவரிராய பிள்ளை (1807-1874)
- Author Name : ஆ. சிவசுப்பிரமணியன் (பதிப்பாசிரியர்)
- Language : Tamil
- Pages : 319
- Publisher : காலச்சுவடு
- Book Edition : டிசம்பர், 2006
English Names: ubadesiyar savari raya pillai, ubathesiyaar savari raya pillai